உலகமே ஒரு பழம்பொருள் தானே. நான் பார்க்கின்ற சூரியன் பழமையானது. நான் பார்க்கின்ற நிலா யாரோ எனக்கு முன்னால் நூற்றாண்டுகாலமாக பார்த்து பழகியது. என் முன் உள்ள கடல் ஆயிரமாயிரம் ஆண்டுகள் பார்த்து சலித்தது. நான் தேடிச் செல்லும் மலை புராதனமானது. இந்த உலகில் கடந்த காலத்தின் சுவடுகள் கண்ணுக்கு தெரியாமல் படிந்திருக்கின்றன.
நானே நிறைய பழைய புத்தகங்கள், பொருட்கள் வாங்கியிருக்கிறேன். அவை யாரோ ஒருவரின் ரசனை என்று நினைத்து அவரை நன்றியோடு நினைத்து பார்த்திருக்கிறேன்.
No comments:
Post a Comment